கட்டுநாயக்கவில் கட்டார் ரியாலினை மாற்றத் தடை? மத்திய வங்கி மறுப்பு!

கட்டார் ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில், குறித்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

கட்டார் நாணயமான ரியாலை, இலங்கை ரூபாவுக்கு மாற்றுவது தொடர்பில், இலங்கை மத்திய வங்கியினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை என மத்திய வங்கி தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய வங்கி தடை விதித்தமையாலேயே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வங்கிக் கிளைகள் கட்டார் ரியால் மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் அரசாங்கத்துடனான இராஜதந்திர உறவை 6 மத்திய கிழக்கு நாடுகள் நிறுத்தியுள்ளன. இதனைத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here