காலநிலையினால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க 8 பில்லியன் ரூபா தேவை

சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பதற்கு எட்டு பில்லியன் ரூபா பணம் தேவைப்படும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்படக்கூடிய வீதிகள், பாலங்களையும் புனரமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டட ஆய்வு நிலையம் இவ்வாறான பகுதிகளை அடையாளம் கண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் அதிவேக நெடுஞ்சாலைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட வீதிகள், பாலங்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இடங்களையும் அடையாளம் கண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here