சலாவ வெடிப்புச் சம்பவம்! உயிர், உடமைச் சேதங்களுக்கு 12870 லட்சம் நட்டஈடு

சலாவ வெடிப்புச் சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடமைச் சேதங்களுக்கு 12870 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

சலாவ வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 95 வீதமான நட்டஈடுகள் வழங்கப்பட்டுள்ளது.

சொத்துச் சேதங்கள், உயிரிழப்புக்கள், காயங்கள் ஏற்பட்டோர் உள்ளிட்டோருக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here