தேயிலை தோட்டத்திற்குள் அலறிய பெண்! செடிக்குள் சிக்கிய ஆபத்தான முதலை

மாத்தறை, அக்குரஸ்ஸ தேயிலை தோட்டத்தில் ராட்சத முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி மக்களால் சுற்றி வளைக்கப்பட்ட முதலை நேற்று பிடிக்கப்பட்டுள்ளது.

தேயிலை பறிக்க சென்ற பெண் ஒருவரின் பாதத்தில் டயர் போன்ற பொருள் மிதிபட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்த போது , அது முதலை என அடையாளம் கண்ட பெண் கூச்சலிட்டு அருகில் உள்ளவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் இணைந்து அந்த முதலையை பிடித்து வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here