நுகேகொடையில் கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய

நுகேகொடையில் கடை எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நாசகாரிகளை உடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள எரிக்கப்பட்ட கடைக்கு இன்று அதிகாலை(6) விஜயம் செய்த அமைச்சர் றிஷாட் பதியுதீன் சம்பவங்களை பார்வையிட்டதுடன் நிறுவன உரிமையாளரிடமும் விபரங்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் றிசாட் பதியுதீன் உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் நுகேகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் உரையாடிய அமைச்சர் றிசாட் பதியுதீன்,

இந்த பகுதியில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவது முதல் தடவை அல்ல. ஏற்கனவே இந்தப் பகுதியில் 3 தடவைகள் கடைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

பொலிசார் கடமைகளை விழிப்பாகச் செய்யாதவரை இனவாத நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடிய அமைச்சர் றிசாட் பதியுதீன்,

எத்தனையோ உறுதி மொழிகளை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு வழங்கிய போதும் சட்டத்தின் பிடியிலிருந்து நாசகாரிகள் தப்பியே வருகின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கெதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.

தொடர்ச்சியாக தினமும் ஏதாவது ஒரு சம்பவங்கள் திட்டமிட்டும், குறித்த இலக்கை நோக்கியும் நகர்த்தப்படுவதை சட்டத்தின் காவலர்களும் மற்றும் அரசாங்கமும் புரிந்து கொண்டு நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம் சமூகம் பீதியான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களின் சொத்துக்கள் சூரையாடப்படுவதாகவும், அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here