பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் இனமுரண்பாட்டைத் தடுக்க முடியும்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் இனமுரண்பாட்டைக் கட்டுப்படுத்தலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் சந்தித்த பின்னர் ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று தெளிவானதொரு அரசியல் சீர்திருத்தம் இன்மையால் நாட்டில் பல இனவாதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. மாகாணங்களுக்கிடையிலான பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் எவருமே இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட நாம் அனுமதித்து இருக்க மாட்டோம்.

இதன்மூலம் எமது மாகாணங்களின் பாதுகாப்பினை நாம் வரையறுத்து இனமுறுகல்களைத் தோற்றுவிக்கும் சக்திகளை நாம் முறியடிக்க முடியும்” என முதலமைச்சர் நசீர் அஹமட் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here