மட்டக்களப்பு கல்வி வலயத்தில் முறையற்ற விதங்களில் அதிபர்கள் நியமிப்பு!

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள 12 பாடசாலைகளில் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு முரணாக அதிபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் இது தொடர்பாக இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டுக் கடிதத்திலேயே மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாகவும், தாபனவிதிக்கோவைக்கு எதிராகவும் மேற்குறிப்பிடப்பட்டவாறு 12 பாடசாலைகளின் அதிபர்கள், வலயக் கல்விப் பணிப்பாளரின் வெளிப்படைத் தன்மையற்ற சிபார்சுக்கமைவாக நியமிப்புச் செய்யப்பட்டுள்ளதனை தங்களின் மேலான கவனத்திற் கொண்டு வருகின்றேன்.

மேற்படி நியமிப்புக்களை உடன் இரத்துச் செய்து, நம்பகத்தன்மையுடன் கூடிய பொறுப்புக் கூறலுடன் மேற்படி பாடசாலைகளின் அதிபர் நியமிப்புக்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என குறித்த முறைப்பாட்டுக் கடிதத்தில் பொன்னுத்துரை உதயரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here