மாத்தறை தெனியாய பகுதியில் வெளிநாட்டு சவப்பெட்டி மீட்பு!

மாத்தறை தெனியாய கொட்டப்பொல பிரதேசத்தில் சவப்பெட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சவப்பெட்டி, மீட்கப்பட்டதாகவும் சவுதி அரேபியாவில் இறந்த இலங்கையர் ஒருவரின் சடலம் கொண்டுவரப்பட்ட சவப்பெட்டியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சவப்பெட்டி, வேறு பிரதேசத்தில் இருந்து வெள்ளத்தால் கரையொதுங்கி இருக்கலாம் எனவும் இதில் இறந்தவரின் உடல் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த சவப்பெட்டியில் அரேபிய மற்றும் ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகை காணப்படுகின்றது.

இதில், சவுதி அரேபிய சுகாதார அமைச்சு என பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here