வெளிவிவகார அமைச்சராக மோடியை சந்திக்கும் ரவி!

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் இந்தியா நோக்கிச் செல்லவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்வதற்காகவே அவர் இந்தியா நோக்கி புறப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றிரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடுவார் என்றும் ஏனைய அதிகாரிகளுடன் நாளைய தினம் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டட ரவி கருணாநாயக்கவின் முதல் வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here