33 வருடங்களுக்குப் பின் வடக்கில் மீண்டும் உதயமாகப்போகும் திணைக்களம்

வடக்கில் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணியகம் ஒன்று திறந்துவைக்கப்படவுள்ளது.

குறித்த பணியகம் காங்கேசன்துறையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வடக்கில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முற்றாக முடங்கியிருந்தன.

சுமார் 33 வருடங்களாக வடக்கில் சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமல் இருந்தன எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வடக்கில் தற்போது நடைபெறும் கடத்தல் சம்பவங்களை கருத்தில் கொண்டு மீண்டும் சுங்கத் திணைக்களத்தின் பணியகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், வடக்கில் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, மன்னார் ஆகிய இடங்களில் சுங்கத் திணைக்களப் பணியகங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here