அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச் சென்ற அங்கஜன் இராமநாதன்

தெற்குப் பகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உதவிப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்றைய தினம் நேரடியாக சென்று பார்வையிட்டு, சேகரிக்கப்பட்ட பொருட்களையும் அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினர் வழங்கியுள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தனிப்பட்ட பங்களிப்பின் மூலமாக வழங்கப்பட்ட பொருட்களும் மதியம் 12 மணியளவில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் ஊடாக மக்களுக்கு சென்றடைவதற்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், பால்மா மற்றும் பாடசாலை மாணவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பன கையளிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here