அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்க ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா டளஸ் பகுதி மற்றும் ஒக்லஹோமா(Oklahoma) ஆகிய பகுதிகளில் ஜூன் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போதே சட்டவிரோதமாக தங்கியிருந்த குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சட்டவிரோதமாக தங்கியிருந்த 70 பேர் வரையில் கைது செய்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 64 பேர் ஆண்களும், ஏனையவர்கள் பெண்கள் என அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 62 பேர் மெக்சிக்கோவை சேர்ந்தவர்கள் என்றும், மூவர் El Salvador பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஏனையவர்கள் கியூபா, Guatemala, தென் கொரியா, இலங்கை மற்றும் சிம்பாபே நாட்டவர்கள் எனவும் அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here