ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் இன்று

ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மாலை ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அவை ஒத்திவைப்பு விவாதம் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், அனர்த்த நிலைமைகளின் போது ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து இன்றைய ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

இதேவேளை கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுக்கூட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here