இன்றைய ராசிபலன் 07/06/2017

மேஷம்: குடும்பத்தினர் ஒத்துழைப்பர். அத்தியாவசிய செலவுக்கு கடன் வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப லாபம் கிடைக்கும். உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும். சீரான ஓய்வு உடல் நலம் காக்கும்.

ரிஷபம்: வாழ்வில் புதிய அனுபவத்தைப் பெறுவீர்கள். எதிரி தொல்லை மறையும். தொழில், வியாபாரத்தில் எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். தாராள லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.

மிதுனம்: யாரிடமும் சொந்த விஷயம் பேசுவது கூடாது. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

கடகம்: புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பணிகளில் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். எதிர்பார்த்த சுபசெய்தி உங்களைத் தேடி வரும். ஆடம்பர பொருள் வாங்குவீர்கள்.

கன்னி: எதிர்பாராத வகையில் வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. மனைவியின் செயல்பாடு
மகிழ்ச்சி அளிக்கும்.

துலாம்: நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான ஆதாயம் கிடைக்கும். ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது. சீரான ஓய்வு உடல் நலம் பெற உதவும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: பொது விஷயங்களில் அக்கறை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். விழா, விருந்து என சென்று மகிழ்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு: பேச்சில் இனிமை நிறைந்திருக்கும். உறவினர் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு கூடும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கித் தருவீர்கள்.

மகரம்: அன்றாட பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தி மூலம் ஆதாயம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் செலவு உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

கும்பம்: எதிரிகளை இனம் கண்டு விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் கிடைக்கும். சொத்து, முக்கிய ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. பிள்ளைகளின் நலனில் அக்கறை ஏற்படும்.

மீனம்: நண்பர்களின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here