கனவு கலைந்து விட்டது என்கிறார் அத்துரலியே ரதன தேரர்

நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எவ்வித நல்லதையும் செய்வதற்கு எதிர்பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய மகா சபையின் தேசிய கொள்கை ஆணைக்குழுவை நியமிப்பது சம்பந்தமான வரைவு யோசனையை ஜனாதிபதியிடம் கையளிப்பது குறித்து கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லது செய்ய வேண்டும் என்ற கனவு கலைந்து விட்டதாகவும், அரசாங்கத்தின் கீழ் கெடுதியான எதுவும் நடக்காமல் தடுப்பதை மாத்திரமே செய்ய முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு தேவையான வகையில் தற்போது பல்வேறு கொள்கைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால், தேசிய கொள்கை ஒன்றில் இருந்து சகல தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

நிரந்தர யுகத்திற்கான வழி என்ற புதிய கொள்கை அறிக்கையின் கீழ் 2020 ஆம் ஆண்டில் புதிய ஜனாதிபதி ஒருவரை உருவாக்குவதே தேசிய கொள்கை திட்டத்தின் நோக்கம் எனவும் அத்துரலிய ரதன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here