கருணாவுக்கு எதிராக முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

9 கோடி ரூபா பெறுமதியான குண்டு துளைக்காத வாகனத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்காது பயன்படுத்தியமை சம்பந்தமாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கருணா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

சந்தேக நபரான கருணா கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி 10 லட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 50 லட்சம் பெறுமதியான தலா 4 சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குண்டு துளைக்காத ஜீப் வண்டி மட்டக்களப்பில் வாகன திருத்தகம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here