சபாநாயகரை அச்சுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்

தன்னை அச்சுறுத்தி முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா அவைக்குள் தன்னை அச்சுறுத்தியதாகவும் இது நாடாளுமன்றமே அன்றி பிரதேச சபை அல்ல எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சைட்டம் நிறுவனம் சம்பந்தமாக தினேஷ் குணவர்தன விசேட உரையை நிகழ்த்திய பின்னர், அவையில் அமளி ஏற்பட்டது.

அமளியான நிலைமையில், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும், தொடர்ந்தும் இவ்வாறு தடையேற்படுத்தினால் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here