சுமார் 30000 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு

2016-2017ம் கல்வியாண்டுக்காக சுமார் 30000 மாணவ, மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையிலான இசட் புள்ளிகள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த இசட் புள்ளிகள் அடிப்படையில் இந்தக் கல்வியாண்டுக்காக 29696 மாணவ, மாணவியர் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2093 மாணவ மாணவியர் மேலதிகமாக பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

பல்கலைக்கழக அனுமதிக்காக 71106 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை 1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here