சுற்றுலா பயணிகளின் வருகை மே மாதத்தில் வீழ்ச்சி

இலங்கைக்கு வருகை தந்;துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதம் வீழ்ச்சிகண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தகவல்களினூடாக அறியக்கூடியதாகஉள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் ஒரு லட்த்து 25 ஆயிரத்து 44 சுற்றுலா பயணிகள்இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 891 சுற்றுலா பயணிகளேஇலங்கை வந்துள்ளனர்.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மே மாதம் இலங்கைக்குவருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.5 சதவீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளது.

கடந்த ஆண்டு 2.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், இவ்வாண்டில் 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்ப்பதாகசுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here