பகிஷ்கரிப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாபொல கொடுப்பனவு இரத்து

மாலபே சைட்டம் நிறுவனத்தை அங்கீகரிப்பது சம்பந்தமாக தெளிவுப்படுத்த வர்த்தமானி அறிவித்தலை தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்ததாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த 2013-09-26 திகதி இலக்கம் 1829/36 என்ற அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்கள் அதில் அப்படியே இருந்தது.

பட்டமளிக்கும் நிறுவனமாக சவுத் ஏஷியன் இன்ஸ்டியூட் ஒப் டெக்னோலஜி என்ட் மெடிசீன் (பிரைவட்) லிமிடட் நிறுவனத்தை அங்கீகரிக்குமாறும் தினேஷ் குணவர்தன கோரியிருந்தார்.

மாலபே சைட்டம் நிறுவனத்தை மூடுமாறு கோரி 7 ஆயிரம் மாணவர்கள் வகுப்புகளை பகிஷ்கரித்து வருவதாகவும் அவர்களின் மாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு இரத்து செய்யப்படும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவரான தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அமைச்சர் கிரியெல்ல இதனை கூறியுள்ளார்.

வகுப்புகளை பகிஷ்கரிக்கும் மாணவர்களுக்கு மாபொல கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here