பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மாணவன்

மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாகமுனை, அம்பிளாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான புவனுசன் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இவர் உயர் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

பாடசாலைக்கு செல்வதாக கூறி பாடசாலை சீருடையுடன் வந்த குறித்த மாணவன் பாலத்தில் புத்தகப்பையினையும் சைக்கிளையும் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளான்.

இதனைக்கண்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here