மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய உலகின் மிக பெரிய விமானம்!

உலகின் மிக பெரிய விமானம் ஒன்று மத்தல ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களை கொண்டு செல்லும் உலகின் மிக பெரிய விமானங்களின் ஒன்றான Antonov 124 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

சிங்கபூரில் இருந்து மத்தல விமான நிலையத்திற்கு இந்த விமானம் வருகை தந்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும், ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்காக மத்தல விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here