மாயமான மியன்மார் விமானத்திலிருந்து 15 பயணிகள் மீட்பு

மியன்மாரில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இராணுவ விமானம் அந்தமான் கடலில் விபத்துக்குள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்படுள்ளது. மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்து செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

விமானம் புறப்பட்டபோது அதில் 120 இராணுவத்தினரும் சில குடும்ப அங்கத்தவர்களும் அதில் பயணித்தததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 120 பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்ததாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here