முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க இன்று பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார்.

பாரிய மோசடியொன்று தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக தயா ரட்நாயக்க இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை சீமெந்து கைத்தொழிற்சாலைக்கு சொந்தமான பெறுமதியான இயந்திர சாதனங்களை வெட்டி, பழைய இரும்பாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஓர் கட்டமாகவே தயா ரட்நாயக்கவிடம் இன்றைய தினம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரச்னனமாகுமாறு தயா ரட்நாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு போரின் பின்னர் காங்கேசன்துறை சீமெந்து உற்பத்திச்சாலையின் இயந்திர சாதனங்களும் ஏனைய சில இடங்களில் காணப்பட்ட இயந்திர சாதனங்களும் பழைய இரும்பிற்காக வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவத்துடன் மஹிந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கடமையாற்றிய உயர் இராணுவ அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here