வறுமை கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு

வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பினூடாக தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கு பாடசாலை கற்றலை மேற்கொள்வதற்கு துவிச்சக்கரவண்டிகள் 5 வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய செயலாளர் செல்லப்பா இராமச்சந்திரன், மஹாலட்சுமி இராமச்சந்திரன், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை நிகழ்வின் இறுதியில் ஸ்ரீ கனகதுர்க்கை ஆலய உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்பினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here