வவுனியா சைவப்பிரகாச பாடசாலையில் உலக சுற்றுச்சூழல் தினம்

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக உயிரியல் பிரிவு தலைவர் அனந்தினி நந்தகுமார், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், களக்கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், சுற்றாடல் உத்தியோகஸ்தர் விஜயகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், விழிப்புணர்வு நாடகங்கள், பேச்சு, சுற்றாடல் உறுதி மொழி என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here