வவுனியா மரக்காலையில் திருட்டு : இருவர் கைது

வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலுள்ள மரக்காலை ஒன்றில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மரக்காலை ஒன்றில் வேலை செய்த இருவர் உரிமையாளர் வெளியில் சென்ற தருணம் பார்த்து பணம் வைக்கும் பெட்டகத்தினை கடந்த திங்கட்கிழமை இரவு உடைத்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணத்தொகையை திருடியுள்ளனர்.

உரிமையாளர் மீண்டும் வந்து பார்த்த போது பெட்டகம் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு இது தொடர்பாக நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இதனை தொடர்ந்து குறித்த மரக்காலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியை (CCTV) பொலிசார் பரிசீலித்துள்ளனர்.

அங்கு பணி புரியும் இருவரை சோதனை செய்த போது 99000 ரூபா பணம் வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் இருவரையும் கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here