அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமனம்!

அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளராக பி.எஸ்.விதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.

தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஜே.ஏ.ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக, உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சு அமைச்சின் செயலாளராக சிரானி வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி அலுவல்கள் அமைச்சின் செயலாளராக எல்.டீ.சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கிராமிய கைத்தொழில்கள் அமைச்சின் செயலாளராக ஏ.பி.பி.கிதிசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்று மாலை அமைச்சிகளின் புதிய செயலாளர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் செயலாளராக உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாவலி மற்றும் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக அனுர திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். நீர்பாசன அமைச்சின் செயலாளராக ஜயந்த விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் செயலாளராக சரண திஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here