இன்றைய ராசிபலன் 08/06/2017

மேஷம் : அன்றாட பணிகளை உற்சாகமுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

ரிஷபம் : பணியில் பொறுப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் உயரும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாகனப் பயணத்தில் மிதவேகம் கடைபிடிப்பது நல்லது.

மிதுனம் : நீண்ட நாள் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் கூடும். வரவேண்டிய பாக்கி எளிதில் வசூலாகும். பணியாளர்களுக்கு அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

கடகம் : சமூகத்தில் சுய கவுரவம் உயரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

சிம்மம் : மனதில் புத்துணர்வும், செயல்களில் திறமையும் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமித வளர்ச்சி உருவாகும். பணியாளர்களுக்கு அதிக சலுகை கிடைக்கும். மனைவி விரும்பியதை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி : குடும்ப பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பெண்களுக்கு ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணத்தால் இனிய அனுபவம் உண்டாகும்.

துலாம்: நண்பர்களுடன் பொழுதுபோக்கில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

விருச்சிகம் : குடும்பத்தினரைக் குறை கூறும் சூழ்நிலை ஏற்படலாம். பொறுமை தேவை. தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வருமானம் காண்பீர்கள். உடல்நலனுக்காக சிகிச்சை மேற்கொள்வீர்கள்.

தனுசு : நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைவீர்கள். வருமானம் கிடைக்கும். பெண்கள், பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர்.

மகரம் : எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபார மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் பணிபுரிவர். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். பெண்களால் நன்மை உண்டாகும்.]

கும்பம் : உடல்நலனில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தியால் லாபம் கூடும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பெண்கள், உறவினர்களால் பாராட்டப்படுவர்.

மீனம் : வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில், வியாபார வளர்ச்சிக்காக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வீட்டுச் செலவுக்கு தாராள அளவில் பணம் செலவழிப்பீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here