இறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான தீர்வை

இறக்குமதி செய்யப்படும் மீன் கிலோ ஒன்றுக்கான தீர்வை 25 ரூபாவால் குறைக்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீன்களுக்கான தீர்வை நேற்று நள்ளிரவு முதல் அமுக்கு கொண்டுவருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 75 ரூபாவாக உள்ள இந்த வரித் தொகை 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மீன்பிடி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதுடன், நுகர்வோருக்கு அதிக நிரம்பலை வழங்கும் நோக்கில் குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இலங்கைக்கு மாதாந்தம் 2 ஆயிரம் மெற்றிக் டொன் மீன்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here