கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புகைப்பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த அறை மூடப்பட்டுள்ளமையினால் புகைபிடிக்கும் பயணிகள் விமான நிலையத்தின் கழிப்பறையினுள் புகைப்பிடிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.இதனால் அந்த கழிப்பறைகள் புகை அறையாக மாறியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புனரமைப்பிற்காக அந்த அறை மூடப்பட்டுள்ளது. தற்போதைக்கு அது மீளவும் திறக்கப்படும் தினம் தொடர்பில் அறிவிக்க முடியாது என, கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அறை திறக்கப்படுவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here