கல்கிசையில் அறுபது இலட்சம் பெறுமதியான போதைப் பொருள்

கல்கிசை பிரதேசத்தில் அறுபது இலட்சம் பெறுமதியான போதைப் பொருளை பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்கிசை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் பிரகாரம் இன்று காலை முதல் அப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளும், இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தசேரம் மாவத்தை வழியாக சந்தேகத்துக்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை நிறுத்தி சோதனையிட்டபோது அவர் பாரியளவான போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரைக் கைது செய்த பொலிசார், அவரிடமிருந்த போதைப் பொருள் மற்றும் எடுத்து செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி அறுபது இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here