ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் அத்துமீறிய நிறுவன உயரதிகாரி

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் பெர்பெசுவல் நிறுவன உயரதிகாரியொருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணைமுறிகளை மோசடியாக கொள்வனவு செய்து பாரிய தொகையொன்றை அரசாங்கத்துக்கு இழப்பேற்படுத்தியுள்ளதாக பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனுக்குச் சொந்தமான நிதி நிறுவனமாகும்.

இந்நிலையில் மத்திய வங்கி பிணைமுறிகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸின் பெர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் என்பன இவ்விடயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகளின் போது பெர்பெசுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் சார்பில் பிரதியொருவர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் குறித்த நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் அத்துமீறி விசாரணைகளைப் பார்வையிடும் வகையில் விசாரணை அரங்கில் வந்தமர்ந்துள்ளார்.

இதுகுறித்து சட்டமா அதிபர் திணைக்கள வழக்கறிஞர்கள் முன்வைத்த பலத்த ஆட்சேபனை காரணமாக குறித்த அதிகாரி விசாரணை மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனை தொடக்கம் பல்வேறு கட்டங்களில் அர்ஜுன் மகேந்திரனின் தரப்பினர் சட்டத்தையும், வழமையான நடைமுறைகளையும் மீறிச் செயற்பட முயன்று எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here