பிரபல முன்னணி சிங்கள பாடகர் காலமானார்

பிரபல முன்னணி சிங்கள பாடகர் பிரின்ஸ் உதய பிரியந்த, இன்றைய தினம் காலமானார்.

கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே,அவர் இன்றைய தினம் காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இசைத்துறையில் நுழைந்த பிரியந்த தனது இசைத்திறமையால் முன்னிலை வகித்த ஒருவராவார்.

இதுவரை காலமும் இவர் பல வகையான பாடல்களுக்கு இசையமைத்ததுடன் புகழ்பெற்ற பல பாடல்களை பாடியும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here