புத்தளத்தில் பொலிஸாரின் வீட்டில் கசிப்பு உற்பத்தி: துப்பாக்கிகளும் மீட்பு

புத்தளம், ஆனமடு பகுதியில் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் இருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களும், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே இவ்வாறு மீட்கப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனமடு தென்னந்துரியாவ பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பொது, அந்த வீட்டின் குளியலறையில் இருந்து பத்து போத்தல்கள் கசிப்பு, பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும், வீட்டின் உற்பகுதியில் இருந்து பொலித்தீனால் சுற்றப்பட்டு இருந்த நிலையில், ரி-56 ரக துப்பாக்கியொன்றுடன் சிறிய ரக ரிவோல்வர் ஒன்றும் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here