வாகனத்தில் மோதுண்டு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

அனுராதபுரம் – புதிய கண்டி வீதியின் 6 ஆம் கட்டை பகுதியில் நடந்த விபத்தில் வாகனத்தில் மோதுண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இன்று (08) காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டு விட்டு திரும்பி சென்றுக்கொண்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்து பிரிவில் பணிப்புரிந்த உத்தியோகஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

29 வயதான புத்திக அரவிந்த பண்டார என்ற இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் அமைச்சு ஒன்றுக்கு சொந்தமான கெப் வண்டியே மோதியுள்ளது.

இதேவேளை, விபத்து ஏற்பட்ட சமயத்தில் சொகுசு வாகனத்தை செலுத்திச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் தப்பிச் சென்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here