அமைச்சர் ஜோன் வயதான மதம் பிடித்த யானை : சமீர பெரேரா

அரசாங்கத்தில் உள்ள சில அமைச்சர்கள் ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் இருந்த அரசியல் கலாசாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும் என எண்ணுவதாக இடது நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான ஜோன் அமரதுங்கவின் செயற்பாடுகள் சம்பந்தமாக ஏதேனும் கருத்து வெளியிடும் கடமை அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சமீர பெரேரா, ஜோன் அமரதுங்கவின் நடத்தையானது வயதான மதம் பிடித்த யானைக்கு ஈடானது என கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டம் ஊடகவியலாளர்களுக்கும் எமக்கும் உள்ளது. அதனை எந்த வகையிலும் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த அரசாங்கத்தினால் இதுவரை முடியாமல் போயுள்ளது.

நாட்டில் 400 பொலிஸ் நிலையங்கள் இருக்கும் நிலையில் நிராயுத பணியான ஒருவரை கைது செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.

தொழிலாளரிடம் காட்டும் எதிர்ப்பை பொலிஸார் ஏன் அடிப்படைவாதிகளிடம் காட்டுவதில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் ஜனவரி 8ஆம் திகதி மக்கள் எதிர்பார்த்த அரசியலை நிறைவேற்ற வேண்டுமாயின் இது சம்பந்தமாக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here