ஆயுதமில்லாத ஞானசார தேரரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?

நாட்டில் 400 இற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் இருந்த போதிலும், பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளதாக இடதுசாரி மையத்தின் இணை இணைப்பாளர் சமீர பெரேரா கூறியுள்ளார்.

பொலிஸார் தொழிலாளர்களிடம் காட்டும் எதிர்ப்பை அடிப்படைவாதிகளிடம் ஏன் காட்டுவதில்லை என்பது குறித்து தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே மக்கள் எதிர்பார்த்த ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் இது தொடர்பில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் எனவும் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்று செயற்பட்ட விதம் குறித்த தமது நிலைப்பாட்டை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here