ஆவண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கம்பஹாவில் கைது

போலீஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து துறைத் போலி சின்னங்களை கொண்ட பெரிய அளவிலான ஆவண மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கம்பஹா பகுதியில் பொலிஸ் சிறப்பு குழுவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

58 வயதான சந்தேக நபர் போலி வாகனப் பதிவு ஆவணங்கள் மற்றும் போலீஸ் சான்றிதழ்கள் உட்பட போலி ஆவணங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் பெருமளவு பணம் குவித்திருந்தார் எனக் கூறப்படுகிறது.

ஜாஎல பகுதியில் உள்ள ஒரு நபர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் துரிதமாக தமது வாகனப் பதிவைப் பெற 30,000 கட்டணம் அறவிட்டுள்ளார். வாக்குறுதி அளித்தார். பின்னர் தாம் சந்தேகநபர் மூலம் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததையடுத்து அவர் போலீஸில் புகார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்தே குறித்த சந்தேக நபர் பின்னர் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் மேலும் மோட்டார் போக்குவரத்து துறை சின்னம் பெறுவதற்கு பணம் கொடுத்த போது அவர் ஒரு ரசீது வழங்கியிருந்தார்.. எனினும், ஜாஎலயைச் சேர்ந்த நபர் அவரது ஆவணங்களின் மீது சந்தேகம்வரவே உடனடியாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வந்தபோது, குறித்த சந்தேகநபரினால் வழங்கப்பட்ட ரசீது போலியானது என தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸ் அணி சந்தேகநபரைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அத்துடன் சந்தேகநபரினால் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள் மற்றும் அவை தயாரிக்கப்படும் உபகரணங்கள் பெரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here