இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விசேட விவாதம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தம் தொடர்பான விசேட விவாதமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன்போது ஒத்துவைப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்து மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றை முன்கூட்டியே அறிந்துக் கொள்வதற்கு முடியாமைக்கான காரணம் மற்றும் இடர் முகாமைத்துவத்தில் காணப்படும் சிக்கல்கள் என்பன தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன.

இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த நாட்களில் அமர்வுகளின் போது விவாதிக்கப்பட்ட போதிலும், அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

அந்தவகையில், குறித்த விடயம் தொடர்பில் விவாதிப்பதற்கான விசேட அமர்வு இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here