இலங்கையின் கடற்படையினருக்கு எதிராக சென்னையில் மனுத்தாக்கல்

இந்திய மீனவர்களை இலங்கையின் கடற்படையினர் தாக்கி வருவதாக குற்றம் சுமத்தி இன்று சென்னை மேல்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களின் சார்பில் பிஸர்மேன் கெயார் என்ற அமைப்பின் தரப்பில் பீட்டர் ரோயன் என்ற சட்டத்தரணி, இந்த மனுவை இன்று தாக்கல் செய்தார்.

இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயலாகும் என்று அம் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்கத்தரப்பின் பதிலை பெறுமாறு நீதிமன்றம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரலை கேட்டுக்கொண்டது.

இந்தநிலையில் கடந்த மூன்று வருடங்களில் ஒரு இந்திய மீனவர் மாத்திரமே இலங்கை- இந்திய கடற்பரப்பில் கொல்லப்பட்டதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மன்றில் அறிக்கை சமர்ப்பித்தார்

இதனையடுத்து வழக்கு பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here