இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் மாற்றம்

இலங்கையில் புதிய கடவுச்சீட்டை அறிமுகப்படுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இந்த புதிய கடவுச்சீட்டை அடுத்த வருடத்தில் இருந்து அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.எம்.ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள கடவுச்சீட்டு 2003ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த கடவுச்சீட்டு அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும்.

இந்த நிலையில் புதிய கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் எம்.எம்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here