இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது: சம்பிக்க ரணவக்க

இலங்கையிலும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேற்கத்தேய நாடுகளில் இடம்பெற்று வரும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று மேற்கு நாடுகளில் மோசமான வகையில் பயங்கரவாதம் பரவியுள்ளது. லண்டன், பிரான்ஸ், ஈரான், நாடுகளில் தொடர்ச்சியாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

ஆசியாவில் இந்தியா, பங்களாதேஷ், மியன்மார் ஆகிய நாடுகளை போலவே இலங்கைக்கும் ஐ.எஸ். அச்சுறுத்தல் உள்ளது.

இலங்கையிலும் அடிப்படைவாத செயற்பாடுகள் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. மேற்கத்தேய நாடுகளுக்கு மாத்திரம் அச்சுறுத்தலாக உள்ள ஐ.எஸ். பயங்கரவாதம் இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here