கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் ஆங்காங்கே மழைப் பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் மிதமான மழைப் பெய்யும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதனை தவிர புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடக காங்கேசன்துறை வரை மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்று 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும்.

இதனால், கடல் கொந்தளிப்பாக காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை நாட்டின் ஏனைய கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும். இதனால், மீன்பிடியில் ஈடுபடுவோர் கவனமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here