கபீர் ஹாசிம் – லக்ஸ்மன் யாபா இடையிலான முரண்பாடு!

அமைச்சரவை அமைச்சரான கபீர் ஹாசிம் மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன ஆகியோருக்கு இடையிலான முரண்பாடு தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச முயற்சியான்மை அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு ஆகியனவற்றுக்கு இடையில் அலுவலகத்தை பகிர்ந்து கொள்வதில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று முன்தினம் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

எனவே தொடர்ந்தும் அமைச்சர் யாபா அலுவலகமொன்றை பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சு அலுவலகம் வழங்கப்படும் வரையில் லக்ஸ்மன் யாபா அபேவர்தன சொந்த ஊரான மாத்தறையில் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here