காணாமல் போன மீனவர்களை தேடும் கடற்படையினர்

அம்பாறை ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தெற்கு திசை நோக்கி கடந்த 21 ஆம் திகதி புறப்பட்ட விஜய 2 என்ற ஆழ்கடல் மீன்பிடி படகுடன் 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு, பிட்டிபன மற்றும் பலகத்துறை பிரதேசங்களை சேர்ந்த வர்ணகுலசூரிய ரத்னபால, தினேஷ் சத்துரங்க பெர்னாண்டோ, குலகுலசூரிய நிகுலஸ் பெர்னாண்டோ, விஜிகுமார மதுசங்க, நிஹால் விஜேசிறி, சரத் பெர்னாண்டோ ஆகிய மீனவர்களே காணாமல் போயுள்ளனர்.

இவர்களை தேடி கடற்படையின் கிழக்கு கடலில் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கல்முனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here