சிறுவர்களை பணியில் ஈடுபடுத்தும் நபர்களுக்கு எதிரான சட்டம் விரைவில்!

சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி மரிணி டி விவேரா தெரிவித்துள்ளார்.

சிறுவர் பணியார்கள் தொடர்பான முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தெரிவிக்க முடியும் என்பதுடன், அந்த முறைப்பாடுகள் தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸாருடன் இணைந்து விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களிலோ அல்லது 1929 இலங்கை சிறுவர் தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

சிறுவர் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர்களை பாதுகாத்து அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான நாளைய தினத்தை உருவாக்குவதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here