நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது அமைச்சரவைக் கூட்டம்

அடுத்த வாரம் முதல் அமைச்சரவைக் கூட்டம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு வரையறை செய்து இவ்வாறு அமைச்சரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுவதனால், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் கூட்டம் முற்பகல் 11.30க்கு ஆரம்பித்து 12.30 க்கு முடிவுறுத்தப்பட உள்ளது.

இணை அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரட்ன, தயாசிறி ஜயசேகர மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்பார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here