முச்சக்கர வண்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, இருவரை காணவில்லை!

மஹியங்கனையில் ஓட்டோ ஒன்று கால்வாய் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்ஒருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.அத்துடன், சிறுவன் ஒருவரும் குழந்தையொன்றும் காணாமல்போயுள்ளனர்.

மஹியங்கனை பதுளை பிரதான வீதிப் பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டோ விபத்துக்குள்ளானபோது, அதில் சாரதியுடன் சேர்த்து 6 பேர் பயணித்துள்ளனர்.இந்த விபத்தில் 21 வயது பெண் ஒருவரே பலியானார்.

மேலும், 7 வயது சிறுவன் மற்றும் 2வயது பெண் குழந்தை ஆகியோர் காணாமல்போயுள்ளனர்.

அவர்கள் கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போன இரண்டுகுழந்தைகளையும் மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர்குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here