யாழ் வீதிகளில் ஏற்படப்போகும் மாற்றம்!

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாதசாரிக் கடவைகள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் மாற்றியமைக்கப்பட உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து பாதசாரிக் கடவைகளுக்கும் வெள்ளை நிற வர்ணம் பூசுமாறு மாநகர சபை மற்றும் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதற்கமைவாக யாழ். பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி தலைமையில் இது பற்றி தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

ஆதன்படி, தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் உள்ள பாதசாரிக் கடவைகளுக்கு வழமையாகப் பயன்படுத்தப்படும் மஞ்சள் வர்ணம் பூசாமல் வெள்ளை நிறம் பூசப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவைகளுக்கு வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்படும் என்று யாழ்ப்பாண மாநகர சபை வேலைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here